மல்லையா முதல் அல்ல...குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பியவர்கள்...வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்து விட்டு விஜய் மல்லையா வெளிநாடு தப்பி செல்வதற்கு மத்திய அரசு உதவி செய்துள்ளது என்று நாடாளுமன்றத்தின்இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சராமரியாக குற்றம்சாட்டி வரும் நிலையில், இவ்வாறு நடப்பது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் குற்றங்களில் ஈடுபட்டு இந்தியாவை விட்டு வெளியேறியவர்களை பற்றி இப்போது பார்க்கலாம்

வாரன் ஆண்டர்சன்


யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வாரன் ஆண்டர்சன். 1984-ம் ஆண்டு மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தின் ஆலையிலிருந்து விஷ வாயு வெளியேறியது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். அந்த கோர சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு பிறகு இந்தியாவிற்கு வந்த வாரன் ஆண்டர்சன் போபால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சில மணி நேரங்களிலேயே ஜாமீன் வாங்கிய அவர், அமெரிக்காவிற்கு தப்பி சென்றார். அமெரிக்க அரசின் அழுத்தத்தின் காரணத்தினால் தான், அவரை அன்றைய ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு தப்பிக்க விட்டது என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஒட்டாவியோ குவாட்ரோச்சி


இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குவாட்ரோச்சி 1986-ம் ஆண்டு நடந்த ரூ.64 கோடி போபர்ஸ் பீரங்கி ஊழலில் தொடர்புடையவர். இவரை இந்தியாவிற்கு கொண்டு வர தங்களால் முடிந்த வரை முயற்சி எடுத்ததாகவும், குற்றவாளியை ஒரு அயல்நாடு ஒப்புவிப்பது இரு நாட்டிற்கு இடையே உள்ள ஒப்பந்தங்களை பொருத்தது எனவும் கூறியது காங்கிரஸ் அரசு. சிபிஐ அவரை பிடிக்க சர்வதேச போலீசான இன்டர்போல் உதவியும் நாடியது. இருந்தும் வழக்குகளை சந்திக்க அவரை கடைசி வரை இந்தியா கொண்டு வர முடியவில்லை.

இத்தாலிய மாலுமிகள்


2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடுக்கடலில் இரண்டு இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலிய மாலுமிகள் மஸ்சிமிலியானோ லத்தூர் மற்றும் சால்வடோர் கைரோன். தப்பி செல்ல முயன்ற இவர்களை இந்திய கடற்படை மடக்கி பிடித்தது. பிறகு ஜாமீன் வாங்கிய இவர்கள் இத்தாலி சென்றனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் இந்தியா வந்து வழக்கை சந்திக்க மாட்டார்கள் என இத்தாலி அதிகாரி ஒருவர் கூறினார்.

லலித் மோடி


ஐ.பி.எல்-லை உருவாக்கி வளர்த்ததில் முக்கிய பங்கு கொண்டவர் லலித் மோடி. ஐ.பி.எல்-யின் ஒளிபரப்பு மற்றும் இணைய உரிமையிலும் சுமார் ரூ.500 கோடி முறைகேட்டில் ஈடுபட்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தை ஏமாற்றினார் என அவர் மீது வழக்கு பதிவு செய்தது அமலாக்க துறை. அதன் பிறகு தனது உயிருக்கு ஆபத் இருப்பதாக கூறி இந்தியாவை விட்டு வெளியேறினர். லலித் மோடியை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று இன்டர்போல் அமைப்பிடமும் அமலாக்கத் துறை வலியுறுத்தியது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.