விஜயகாந்துடன் இனி கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை: தமிழிசை திட்டவட்டம்கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் இனி பேச்சு நடத்த மாட்டோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு நடக்கிறது என்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. இல்லவே இல்லை என்கிறார் மு.க.ஸ்டாலின். தோல்வி பயத்தில் அவர்கள் குழம்பியிருப்பதையே இது முரண்பட்ட பேச்சு காட்டுகிறது. தேமுதிக வராவிட்டால் வெற்றி பெற முடியாது என்ற நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்ததால் இந்தத் தேர்தலிலும் கூட்டணி அமைக்க அக்கட்சியுடன் பேச்சு நடத்தினோம். பாஜகவைப் பொறுத்தவரை தேர்தலுக்கு முன்பு முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணி தொடர்பாக விஜயகாந்துடன் இனி பேச்சு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.