பூடான் நாட்டில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் இந்திய அணியின் முத்துப்பேட்டை மாணவனுக்கு உற்சாக வரவேற்புதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி மகன் சல்மான் பார்சி (16), இவர் திருச்சியிலுள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கைப்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்ட சல்மான் பார்சி மாநில மற்றும் இந்திய அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்கள் பெற்றுள்ளார். இந்நிலையில் சென்ற மாதம் 27, 28-ம் தேதிகளில் பூடான் நாட்டில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர்க்கான சர்வதேச அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பில் விளையாட சல்மான் பார்சி தேர்வு செய்யப்பட்டு பங்குப்பெற்றார். இதில் சல்மான் பார்சி விளையாடிய இந்திய அணி தங்கம் வென்றது. இந்த நிலையில் விளையாட்டு போட்டி முடிந்து நேற்று மாலை முத்துப்பேட்டைக்கு மாணவன் சல்மான் பார்சி வந்தார். அவருக்கு ஆசாத்நகர் ஜமாத் தலைவர் ஜின்னா, பொருளாளர் சேட்டு ஆகியோர் வெளிநாடு வாழ் ஆசாத்நகர் இளைஞர்கள் சார்பில் 4 அடி உயரம் உள்ள கோப்பையை வழங்கி வரவேற்றனர்;. அதே போல் ஆசாத்நகர் இளைஞர்கள் பைசல், நபீல், இபுராஹிம், சதாம், மக்கா பள்ளி வாசல் நிர்வாகி ஹாஜா அலாவுதீன், அ.தி.மு.க நிர்வாகி எம்.ஏ.கே.சிராஜுதீன், முக்கிய பிரமுகர்கள் ரஹ்மத்துல்லா, சலீம், நெய்னா முகம்மது, சேக் நசூருதீன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுல்தான் இபுராஹிம், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முருகையன், இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த சரவணன், குமார், திருஞானம் மற்றும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், உறவினர்கள் ஆகியோர் மாணவன் சல்மான் பார்சிக்கு சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குறித்து மாணவன் சல்மான் பார்சி கூறுகையில்: இந்திய அணி சார்பில் நான் விளையாடியது இறைவனின் செயல். நான் பங்குபெற்றதை என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவமாக கருதுகிறேன். இன்னும் அதிக போட்டிகளில் கண்டிப்பாக பங்குபெற்று பெருமை சேர்ப்பேன் என்றார்.


படம் செய்தி:
1.முத்துப்பேட்டையில் பூடான் நாட்டில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் இந்திய அணியின் சார்பில் விளையாடி தங்கம் பெற்று தந்து சொந்த ஊருக்கு வந்த மாணவன் சல்மான் பார்சிக்கு வெளிநாடு வாழ் ஆசாத்நகர் இளைஞர்கள் சார்பில் 4 அடி உயரம் உள்ள கோப்பையை வழங்கி வரவேற்றனர்.


மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை

[gallery columns="1" size="large" ids="32598,32596"]

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.