போதையில் இயக்கினால் நகர மறுக்கும் பைக்: தொழில்நுட்ப மாணவர்கள் கண்டுபிடிப்பு   போதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில், ஆல்கஹால் சென்சாருடன் கூடிய பைக்கை, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பைக்கை ஓட்டுபவர் போதையில் இருந்தால், இந்த பைக் நகராது என்பது இதன் சிறப்பம்சம்.


மது அருந்தியபடி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து களை தவிர்க்கும் வகையில் போலீஸார் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. ஆனாலும் போதையிலும், ஹெல்மெட் அணியாமலும் வாகனம் ஓட்டுவோ ரால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்த பாடில்லை.


இந்நிலையில், போதையில் பைக்கை இயக்கினால் இயங்காத புதிய பைக்கை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா தொழில்நுட்ப கல்லூரியின் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பொறியியல் பிரிவு 3-ம் ஆண்டு மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மாணவர்கள் அஜித், ஐயப்பன், சிவா, ஜெயன் ஆகியோர் கூறியதாவது: இம்முறையில் ஹெல் மெட்டை அணிந்தவுடன் அதில் உள்ள மஞ்சள் நிற விளக்கு எரியும். ஹெல்மெட்டில் ஆர்.எப். டிரான்ஸ்மீட்டர் உள்ளது. அது ஹெல்மட்டை அணிந்தவுடன், பைக்கிலுள்ள ஆர்.எப்.ரிசீவருக்கு சிக்னல் மூலம் தகவல் கொடுக்கும். அதன் பின்னரே சாவியை போட்டு பைக்கை ஸ்டார்ட் செய்யமுடியும். ஹெல் மெட் போடவில்லை என்றால் பைக்குக்கு சிக்னல் கிடைக்காது. பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியதாது.


இதுபோல் இந்த ஹெல் மெட்டில் ஆல்கஹால் சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. மது அருந்தியவர் ஹெல்மெட்டை அணியும்போது, அதில் சிவப்பு விளக்கு எரியும். இதனால் டிரான்ஸ்மீட்டர் சிக்னல் கட்டாகி பைக் ஸ்டார்ட் ஆகாது. அனைவரும் பயன்படுத்த எளிதான இந்த முறையில் ஹெல்மெட்டில் ரீசார்ஜ் பேட்டரி உள்ளது. அந்த பேட்டரிகளை நம் தேவைக்கேற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதுகுறித்து போக்குவரத்து துறை க்கு பரிந்துரைக்க உள்ளோம் என்றனர். மது குடித்துவிட்டு பைக் ஓட்டுவதை கட்டுப்படுத்தும் வகையிலான இந்த முறைக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.