என்ன தேசம் இது என்ன தேசம்சொந்தமாக வீடு கட்ட அல்லது வீடு  வாங்குவதற்கு வங்கியில் கடன் கேட்டால், கடன் பெறுவதற்கு நாம்படும்  அவஸ்தை என்பது சொல்லி புரியவைக்க முடியாது.


வட்டி செலுத்தும் தவணை ஒரு நாட்கள் கழிந்தாலே நம்மை தற்கொலை செய்யும் அளவிற்கு கொண்டு செல்வார்கள் இந்த வங்கி புரோக்கர்கள்.


காவல்துறைகள் மக்களுக்கு நண்பனாக இருப்பார்கள் என்றால் அவர்கள் அரசியல் வாதிகள் போல் கார்பரேட் முதலாளிகளுக்குத்தான் நண்பனாக இருக்கிறார்கள்.


கடந்த வாரம் ஒரு விவசாயி அவர் வாங்கிய  டிராக்டருக்கு  சரியாக வங்கியில்  வட்டி கட்டவில்லை என்று வங்கி புரோக்கர்கள்   காவல்துறையை வைத்து விவசாயியை    அடித்து உள்ளார்கள்.


என்ன கொடுமை??


விவசாயக் கடன் தள்ளுபடி என்று நாம் செய்தியில் பார்க்கிறோம் ஆனால் அது நடை முறையில் இல்லை.


ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் சமீபத்தில்  கூறிய கருத்து விவசாயிகளின் தற்கொலைக்குக் கடன் தான் காரணம்.


தினமும் இரண்டு விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று தற்போதைய  புள்ளி விபரங்களும் சொல்கிறது. ஆனால் விவசாய கடன் தள்ளுபடி என்று ஊடகம் மட்டும் பெரியதாக விளம்பரம் செய்கிறது.


சில விவசாயிகள் இனி இதில் எந்த பலனும் இல்லை என்று விவசாய  நிலத்தை விற்கிறார்கள்.


சோதனை கடந்து அடுத்த செய்தியை பார்த்தால் மிகபெரிய அதிர்ச்சி.


அரசியல் செல்வாக்குமிக்க விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் நிறுவனம் உள்ளிட்ட 406 நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் நிலுவை 70,300 கோடி ரூபாயாகும்.அம்பலப்படுத்தியிருக்கிறது, அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம்.


 கடனைக் கட்டாமல் வங்கிகளைத் திவாலாக்கும் கயவர்கள் கார்ப்பரேட் முதலாளிகளேயன்றி, கஞ்சிக்கில்லாத விவசாயிகளோ, சிறு தொழில் முனைவோரோ அல்ல


பொதுத்துறை வங்கிகளிலிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடனாகப் பெற்று உலகக் கோடீஸ்வரர்களாக வளர்ந்துள்ள இந்தியத் தரகு முதலாளிகள்  அனில் அம்பானி, கௌதம் அதானி, மற்றும் எஸ்ஸார் குழுமத் தலைவர் பிரசாந்த் ரூயா மற்றும் டாட்டா.


இவர்கள் கடனை செலுத்த வில்லையென்றால்  கடனை தள்ளுபடி செய்கிறது வங்கிகள், காரணம் இவர்கள் பின்னாடி ஒளிந்து இருக்கும் அரசியல் வாதிகளே.


அதிகமான நெருக்கடியில்  வங்கிகள் கடனை திரும்ப கேட்டால் நம் நாட்டில்  அரசியல் வாதிகள் அவர்களை நாடு கடத்த உதவி செய்கிறார்கள்.


காவல்துறையோ இந்தியாவிலே இல்லை என்று கையை விரித்து விடுகிறது.


என்ன தேசம் இது என்ன தேசம் – என்று விடியும்.


நன்றி –

யூஸுப் ரியாஸ்  - புதிய விடியல்


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.