முத்துப்பேட்டை பகுதியில் பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி கோரி ஆன்லைனில் பதிவு செய்யலாம். அனைத்து கட்சி கூட்டத்தில் காவல் துறை தகவல்.முத்துப்பேட்டை மார்ச் - 12


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அனைத்து கட்சிக் கூட்டம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு பின்னர் வந்திருந்தவர்களிடம் கலந்தாய்வு நடத்தப்பட்டது. பின்னர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் பேசுகையில்: முத்துப்பேட்டை நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுவர்களிலில் எந்தவித அரசியல் கட்சி விளம்பரங்கள் செய்யக்கூடாது அதே போல் கொடி மரங்கள் விளம்பர பலகைகளை 24 மணி நேரத்தில் அகற்றிக் கொள்ள வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். முத்துப்பேட்டை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக தனி இடங்கள் ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நகரில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராயல் மோட்டார்ஸ் எதிர்புறத்திலும் அதே போல் மன்னை சாலை ரயில்வே கேட் அருகில் உள்ள தனியார் இடத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தெருமுனை பிரச்சாரக்கூட்டங்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பகுதியில் நடத்திக் கொள்ளலாம். பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனைக்கூட்டங்கள் நடத்த அனுமதிக் கோர ஆன்லைனில் பதிவு செய்துக் கொள்ளலாம், தேர்தல் விதிமுறை மீரல் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளை பொதுமக்களும் கட்சியினரும் நேரடியாக எதிர்க்கொள்ளக்கூடாது. காவல்துறைக்கு எந்த நேரத்திலும் தொடர்புக் கொள்ளலாம். அடுத்த அரை மணி நேரத்தில் சம்மந்தப்பட்ட இடத்திற்கு காவல் துறையினர்கள் இருப்பார்கள் என்றார். கூட்டத்தில் அ.தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர் ஆர்.கே.பி.நடராஜன், நகரச் செயலாளர் மங்கள் அன்பழகன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், இலக்கிய அணி செயலாளர் தங்கமணி மற்றும் ராஜமாணிக்கம், தி.மு.க சார்பில் நகரத் துணைச் செயலாளர் நவாஸ்கான், பேரூராட்சி கவுன்சிலர் அய்யப்பன், மாவட்ட பிரதிநிதி இபுராஹிம், காங்கிரஸ் சார்பில் மாவட்ட துணைத் தலைவர் தாஹிர், நகரத் துணைத் தலைவர்கள் குலாம் ரசூல், வேல் முருகன், வட்டாரத் துணைத் தலைவர் தங்கராஜன், த.மா.கா சார்பில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் காமராஜ், பா.ஜ.க சார்பில் ஒன்றிய செயலாளர் செல்வம், எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் நிர்வாகிகள் நெய்னா முகம்மது, மாலிக், மர்சூக், தவ்ஹித் ஜமாத் சார்பில் முகம்மது மீரா லெப்பை கட்டி, ஹாஜா முகைதீன், மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்

ராஜேந்திரன், கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயராமன் வைத்தியநாதன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.

 

படம் செய்தி:
முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் பேசினார்.

 


மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை

 

12829371_473559502841683_2436824779196963819_o(2) 12829371_473559502841683_2436824779196963819_o
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.