துபாய் – திருச்சி விமான சேவையில் இன்று முதல் நேர மாற்றம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு !திருச்சி விமான நிலையத்தில் குளிர்கால மற்றும் கோடைக்கால அட்டவணைபடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்றுடன் குளிர் கால அட்டவணை முடிவுக்கு வந்து புதிதாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணப்படி இன்று நள்ளிரவு முதல் விமான சேவை செயல்படவுள்ளது.

துபாய் – திருச்சி ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயிலிருந்து காலை 7:10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு திருச்சிக்கு சென்றடைந்து பின்னர் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு துபாய்க்கு வந்துக் கொண்டிருந்தது.

இன்று(27/03/2016) முதல் இந்த விமானம் துபாயிலிருந்து மாலை 6:25 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடைந்து பின்னர் நள்ளிரவு 12.55 மணிக்கு புறப்பட்டு துபாய்க்கு காலை 3.45 மணிக்கு வந்து சேரும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.