பூமியில் வேற்று கிரகவாசிகள் கண்டு பிடிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் - வீடியோ



வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து ள்ளனர்.

தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி  வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம். என கூறி உள்ளார்.

வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் முன்னணி நிபுணர்கள் இது வேற்றுகிரகவாசிகளை தொடர்பு கொள்ள ஏற்ற நேரம் என தெரிவித்து உள்ளனர்.அதற்கான செயல்பாடுகளிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்

பிரபஞ்சத்தில் புத்தி கூர்மை உள்ள வேற்று கிரகவாசிகளை கண்டறிய சீன மிகபெரிய ரேடியோ  தொலை நோக்கியை அமைக்க திட்டமிட்டு உள்ளது. தென் மேற்கு சீனாவின் குயிசு மாகாணத்தில் இந்த தொலை நோக்கியை அமைக்கிறது. உலகில் இது போன்ற தொலை நோக்கி புர்டோ ரிகோவில் அமைக்கபட்டு உள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய  புதிய திட்டம்  ஒன்றை லண்டனில் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்துக்காக அடுத்த 10 ஆண்டுகளூக்கு  ரூ.640 கோடி செலவிடப்படும். ரஷ்யாவை சேர்ந்த சிலிகான் வேலி தொழில் அதிபர் யூரி மில்னர் இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கிறார். இந்த திட்டத்திற்கு கேம்ரீஜ் பல்கலைகழகத்தை  சேர்ந்த  வானவியலாளர், காஸ்மோலாகிஸ்ட்  பேராசிரியர் லார்டு மார்ட்டீன் ரீஸ், தலைமை தாங்குகிறார்

இந்த திட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வெல்சில் 64 மீட்டர் ( 210 அடி ) பார்க் தொலைநோக்கி மூலமும், மேற்கு வர்ஜினியாவில்  100 மீட்டர் (328 அடி)  பர்ட் கிரீன் பேங்க் தொலைநோக்கியும்  நிறுவப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது.
இந்த நிலையில்  பிலெய்டன் என அழைக்கப்படும் வேற்றுகிரகவாசிகள் வடமேற்கு அர்ஜென்டினாவில் இருந்து 70 மைல் தூரத்தில் இருக்கும் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பறக்கும் தட்டுகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும்  யுஎப்ஓ சார்ந்த பத்திரிக்கையில் தெரிவிக்கபட்டு உள்ளது.அர்ஜென்டினாவில் மொத்தம் 30 பிரிவினர் இருப்பதாகவும் அவர்கள் தங்களது பரிணாம வட்டத்தின் இறுதியை நெருங்கி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிலெய்டன் பேஸ் காச்சி, லா போமா, ரூட் 40 இடையே இருக்கலாம் என்றும், இதன் மற்ற பிரிவினர் பிரபஞ்சத்தின் மூலைகளில் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.இதன் முக்கிய தளமானது வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளில் மறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து யுஎப்ஓ ஆய்வாளர் ஸ்காட் வாரிங் கூறும் போது:-

பிலெய்டன்கள் நார்டிக் வேற்றுகிரகவாசிகள் என கூறப்படுவதாகவும், இவை பார்க்க மனிதர்களை போன்றிருக்கும் வேற்றுகிரகவாசிகள்  என்றும் தெரிவித்துள்ளார்.இவ்வகை ஏலியன்கள் உலகம் மற்றும் நமது எதிர்காலத்தில் அதிக அக்கறை கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.ஸ்கான்டிநாவியன் மற்றும் கருப்பு தோல் கொண்ட பிலெய்டன்கள் உயரமாகவும், ஒல்லியாகவும், பார்க்க அழகாகவும் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.பால் வழியின் வெளியே இருக்கும் லைரா எனும் கிரகத்தில் இருந்து பிலெய்டன்கள் இறங்கி வந்திருப்பதாக யுஎப்ஓ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.