கன்னையா குமார் தலைக்கு விலைபேசிய பயங்கரவாதி. பலமாதங்களாக வீட்டுவாடகை கொடுக்கவில்லையாம்,ஜே.என்.யூ. மாணவர் கன்னையா குமார் தலைக்கு ரூ. 11 லட்சம் விலைபேசியவர் வங்கி கணக்கில் ரூ. 150 உள்ளது தெரியவந்து உள்ளது. போஸ்டர் ஒட்டிய நபர் பல மாதங்களாக இருக்கும் வீட்டிற்கே வாடகை கொடுக்காமல் உள்ளார் என்று ஆங்கில பத்திரிக்கை நடத்திய விசாரணையில் தெரியவந்து உள்ளது.


கன்னையா குமார் கடந்த மாதம் 12-ந்தேதி தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து 2 நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் விடுதலை ஆனார். பின்னர் அவர் பேட்டி அளித்தபோது பிரதமர் மோடியையும் பா.ஜனதாவையும் கடுமையாக விமர்சித்தார். இதனையடுத்து கன்னையா குமாரை கொலை செய்பவர்களுக்கு பரிசு என்று ஆங்காங்கே ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தியது.


இதற்கிடையே ஜாமீனில் வெளிவந்துள்ள கன்னையா குமாரை சுட்டுக் கொல்வோருக்கு ரூ. 11 லட்சம் வெகுமதி என்று அறிவித்து டெல்லியில் 1,500 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. ‘வந்தே மாதரம்’ என்ற தலைப்பில் உள்ள அந்த சுவரொட்டியில் தேசத் துரோகி கன்னையா குமாரை சுட்டுக் கொல்வோருக்கு பூர்வாஞ்சல் சேனா சார்பில் ரூ. 11 லட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் இதற்கு கீழே, ஆதர்ஷ் சர்மா, பூர்வாஞ்சலின் மகன், பூர்வாஞ்சல் சேனா என்று குறிப்பிட்டு மொபைல் எண்ணும் தரப்பட்டு இருந்தது. டெல்லி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


இந்நிலையில் போஸ்டர் ஒட்டிய பூர்வாஞ்சல் சேனா தலைவர் ஆதர்ஷ் ஷர்மாவிற்கு வங்கி கணக்கில் வெறும் ரூ. 150 மட்டும் உள்ளதும், பல மாதங்களாக இருக்கும் வீட்டிற்கு கூட வாடகை கூட கொடுக்கவில்லை என்பது தெரியவந்து உள்ளது.


போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்த செல்போன் எண் பயன்பாட்டில் இல்லை. பத்திரிக்கைக்கு அதிகாரி ஒருவர் அளித்து உள்ள செய்தியில், “அன்றாட பிழைப்புக்கு கூட அவரிடம் தொர்ச்சியான வருமானம் கிடையாது. அவரது நண்பர்களிடம் வாங்கும் கடனை கொண்டே வாழ்க்கையை ஓட்டுகிறார். தனது செல்வாக்கை பயன்படுத்தி போலீஸ் நிலையம் மற்றும் அலுவலகங்களில் வேலையை முடித்து தருவதாக பொதுமக்களிடம் ரூ100 முதல் ரூ. 500 வரையில் வாங்குபவர்,” என்று குறிப்பிட்டு உள்ளார்.


சர்மா பீகார் மாநிலம் பெகுசாராயை சேர்ந்தவர், அவருடைய செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு விட்டது. அவருடைய உறவினர்கள் யாருடனும் அவர் பேசவில்லை என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


சர்மாவிடம் விசாரணை நடத்த அவரை கைது செய்ய பீகாருக்கும் டெல்லி போலீஸ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.