இண்டர்நெட் பயன்படுத்தும் இந்தியர்களுக்கு ஓர் முக்கிய செய்தி!இந்தியாவில் தொழில்நுட்ப பெருக்கத்தால் இண்டர்நெட்டின் தேவை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது, இந்நிலையில் AKAMAI TECHNOLOGIES நிறுவனத்தார் இந்தியாவில் இண்டர்நெட்டின் வேகம் குறித்து அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

உலக அளவிலான இண்டெர்நெட் வேகம் பற்றிய ஆய்வில் இந்தியாவின் இண்டெர்நெட் வேகம் தான் ஆசியாவிலேயே மிகக் குறைந்தது என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.

உலக சராசரி இண்டர்நெட் இணைப்பு வேகம் 23 மடங்காக உயர்ந்துள்ளது என்றும், சராசரி இணைப்பு வேகத்தில் ஆசியாவிலேயே தென் கொரியா 26.7Mbps என்ற வேகத்தில் முதலிடத்தில் உள்ளது, எனினும் ஆசிய-பசிஃபிக் வட்டாரத்திலேயே 2Mbps வேகத்தில் மிகவும் மெதுவான வேகமே இந்தியாவில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உச்சநேர வேகம் கூட தென் கொரியாவின் சராசரி வேகம் அளவுக்கு ஈடாக முடியவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகின் அதிவேக மொபைல் இண்டெர்நெட் வேகத்தினை கொண்ட நாடாக இங்கிலாந்து 26.8Mbps வேகத்துடன் முதலிடத்தில் உள்ளது, 14Mbps வேகத்துடன் ஸ்பெயின் இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.