திமுக கூட்டணிக்கு மனித நேயம் மக்கள் கட்சி ஆதரவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்திமுக கூட்டணியில் மனித நேயம் மக்கள் கட்சி இடம்பெறுவது குறித்து இன்று முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. இதுக்காக ஒவ்வொரு கட்சியும் தங்களது கூட்டணியை சேர்க்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த வகையில் திமுகவை பொருத்த அளவில், திமுகவிற்கு ஏற்கனவே காங்கிரஸ் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி இருக்கிறது. இதுமட்டுமல்ல தினம்தோறும் பல அமைப்புகள் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இன்று மனித நேயம் மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் மு.க.ஸ்டாலினை வந்து அண்ணா அறிவாலயத்தில் பேச உள்ளார்கள். ஏற்கனவே அவர்களிடம் பல கட்சிகள் இருந்தால் கூட, இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு ஜெயலலிதா அவர்கள், பல கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியபோது மனித நேய மக்கள் கட்சிக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், அப்போது அந்த கட்சிகளுக்குள்ளே சில சலசலப்பு ஏற்பட்டு அந்த கட்சியினர் சிலர் வந்து திமுக கூட்டணிக்கு செல்லலாம் என்று முடிவு எடுத்துள்ளனர். அந்த அடிப்படையில் இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்திக்க போவதாக தகவல்கள் வந்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.