மும்பையில் காரில் உள்பக்கமாக கதவு பூட்டியதால் சிக்கிய சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்புகாட்கோபரில் உள்பக்கமாக கதவு பூட்டியதால் காரில் சிக்கிய சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.


மும்பை தாமோதர் பார்க் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த சிறுவன் குர்பான் ரகீம் (வயது 5). இவரது தந்தை தென்மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தணிக்கையாளராக பணியாற்றி வருகிறார். சிறுவன் குர்பான் ரகீம் மதியம் வீட்டருகே விளையாடி கொண்டு

இருந்தான். இந்தநிலையில் அவன் திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனை தேடி அலைந்தனர்.


இந்தநிலையில் நேற்று மாலை சிறுவன் குர்பான் ரகீம் அவன் வீட்டருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருட்டு காரில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவன் குர்பான் ரகீம் விளையாடி கொண்டு இருந்த போது, அவன் வைத்திருந்த பந்து போலீசார் நிறுத்தி வைத்திருந்த காருக்குள் சென்றுள்ளது. எனவே அவன் பந்தை எடுக்க காருக்குள் சென்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக காரின் கதவு உள்பக்கமாக பூட்டிக்கொண்டதால், சிறுவன் காரில் இருந்து வெளியே வர தெரியாமல் உள்ளேயே சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.


போதிய இடவசதி இல்லாததாலேயே சிறுவன் வீட்டருகே உள்ள காலி இடத்தில் திருட்டு கார்களை நிறுத்தி வைத்துள்ளதாக போலீசார் கூறினர். இந்த சம்பவம் குறித்து பார்க்சைட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.