அனைத்து நகை கடைகளிலும் ஒரே அளவு சேதாரம் வசூலிக்க முடிவு; நகைகடை அடைப்பு நீடிக்கும் நிலையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்
அனைத்து நகைகடைகளிலும் ஒரே அளவு சேதாரம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கலால்வரி விதிப்புக்கு எதிர்ப்பு

தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால்வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்க நகை நிறுவனங்கள், வியாபாரிகள், தங்க நகை தொழில் சார்ந்த தொழிற்கூடங்கள் அனைத்தும் நாடு முழுவதும் கடந்த 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை கடை அடைப்பு செய்தனர்.

பின்னர், மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வராததால், கடந்த 8-ந்தேதியில் இருந்து காலவரையற்ற கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று சென்னையில், தங்க நகை வியாபாரிகள் அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டம் குறித்து சென்னை வைரம் மற்றும் தங்க வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி நிருபர்களிடம் கூறியதாவது:-

அரை நிர்வாண போராட்டம்

கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக நாங்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அடுத்த கட்டமாக, மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் ஊர்வலமாக செல்ல இருக்கிறோம். அதற்கான அனுமதி பெற்று சென்னையில் நடத்துவோம்.

வருகிற 17-ந்தேதி டெல்லியில் 5 லட்சம் தங்க நகை வணிகர்கள், வியாபாரிகள் பங்கேற்கும் போராட்டம் நடைபெற உள்ளது. அதிலும் நாங்கள் பங்கேற்க இருக்கிறோம். அதற்குள் மத்திய அரசிடம் இருந்து நல்ல பதில் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி இல்லையென்றால், மத்திய அரசு விதித்த கலால்வரியை திரும்ப பெறும்வரை போராட்டம் தொடரும்.

தங்க நகை சேதாரம்

தமிழகத்தில் இந்த கடை அடைப்பு போராட்டத்தால், இதுவரை ரூ.3,150 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் ரூ.90 ஆயிரம் கோடி வரை வர்த்தக இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு ஒன்று எடுத்து இருக்கிறோம். அதாவது, தங்க நகைகளுக்கான சேதாரம் ஒவ்வொரு கடைகளுக்கும் வித்தியாசப்பட்டு காணப்படும். அந்த வித்தியாசத்தை போக்கும் வகையில், அனைத்து தங்க நகை கடைகளிலும் ஒரே சேதாரத்தை கொண்டு வருவதற்கான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இதற்கு அனைத்து தங்க நகை வியாபாரிகளும் ஒத்துழைப்பு தந்து இருக்கிறார்கள். தற்போது நடைபெற்று வரும் போராட்டம் முடிந்ததும், இதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையை நாங்கள் செய்ய முடிவு செய்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

201603120234039999_Same-wastage-tariff-as-Jewellers-strike-enters-10th-day_SECVPF.gif
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.