அல் பாத்திஹா சூராவிற்கு உருக்கமாக விளக்கமளித்து சபையோரை கண்ணீர் சிந்தவைத்த...... வீடியோ...திருகுர்ஆனின் அல் பாத்திஹா சூராவிற்கு உருக்கமாக விளக்கமளித்து சபையோரை கண்ணீர் சிந்தவைத்த அமெரிக்க திரைப்படதுறை ஜாம்பவான் பிரான்ஸிஸ் போர்ட் கொப்போலா

 

அமெரிக்காவின் Detroit, மிக்ஸிகன் மாநிலத்தில் பிறந்த பிரான்ஸிஸ் போர்ட் கொப்போலா(Francic Ford Coppola) அமெரிக்க ஒஸ்கார் வரலாற்றில் இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை இம்மூன்றுக்காகவும் ஒஸ்கார் பரிசுபெற்ற ஆறு பேரில் ஒருவராவார். இவர் 15 பேரை கொண்ட திரைப்படதுறை நீதிபதிகளின் தலைவரும், The God Father, Apocalypse போன்ற பிரமாண்டமான படங்ககளின் தயாரிப்பாளரும் ஆவார்.

மொரோக்கோவில் மரகஸ் என்னும் இடத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், கேள்வி நேரத்தின்பொழுது இஸ்லாம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு புனித திருகுர்ஆனின் முதல் சூராவாகிய அல்ஹம்து சூராவின் கருத்தை மிக அழகாகவும், உணர்வுபூர்வமாகவும், சபையோர் முன்நிலையில் எடுத்துக்கூறினார்.

இது பலருடைய மனதை வருடக்கூடியதாகவும், கண்ணீரை வரவழைப்பதாகவும் இருந்தது.

அவர் மைக்ரோபோனை கையிலெடுத்து, சூரா அல் பாத்திஹா கூறும் சமாதானம், அன்பு, சகிப்புத்தன்மை, போன்றவற்றை எவ்வாறு கையாள்கிறது என்பதற்கு விளக்கம் கூறியபொழுது, சபையோர்கள் மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

அழகான இம்மார்க்கம் அராபிய நாகரீகத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் விஞ்ஞானம், கணிதம், மருத்துவம் போன்ற துறைகளில் அதிஉயர் பீடங்களை அடைந்திருந்தது.

இப்புனித புத்தகத்தில் முதல் பக்கத்திலேயே இறைவன் அளவற்ற அருளாளனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் கூறப்பட்டு, கடைப்பிடிக்கவும்பட்டது. அத்தகைய இறைவன் அனுப்பிய இந்த புனித நூல் இன்று நம் மத்தியில் மிகத்தவறாக சித்தரிக்கப்பட்டதன் மூலமாக மக்களின் மனதை நாம் துன்பப்படுத்துவதை விட்டும் எம்மை பாதுகாப்பானாக.
அங்கிருந்த சபையோரில் அதிகமானோர் பேசா மடந்தைகளாகவும், கண்ணீர் சொரிந்தவர்களாகவும் காணப்பட்டனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.