முசாபர்நகர் கலவரம் குறித்த விசாரணைக்குழு அறிக்கை வெறும் கண்துடைப்பு: மாயாவதி குற்றச்சாட்டுமுசாபர்நகர் கலவரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை வெறும் கண்துடைப்பு என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் 2013-ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் கலவரத்தில் 62 பேர் பலியாகினர். இதுதொடர்பாக விசாரிப்பதற்கு நீதிபதி விஷ்ணு சகாய் தலைமையிலான ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் விசாரணை நடத்தி 700 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், உளவுத்துறை தோல்வியடைந்ததாலும், காவல்துறையின் மெத்தனத்தாலும் இந்த கலவரம் பரவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், ஊடகங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த கமிஷன் அறிக்கை குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியதாவது:-

முசாபர்நகர் கலவரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் அழுத்தம் கொடுத்ததால் நீதிபதி விஷ்ணு சகாய் தலைமையில் நீதிவிசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த கமிஷன் தாக்கல் செய்த அறிக்கை கண்துடைப்பு அறிக்கை மட்டுமின்றி நீதியை விரும்பும் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் அறிக்கையாகும்.

குற்றம் செய்தவர்களை தண்டிக்கப்படக்கூடாது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கக்கூடாது என்பதை இந்த அறிக்கை நிரூபித்துள்ளது. ஆனால், அரசு தவறு செய்யவில்லை என்று நற்சான்றிதழ் கொடுத்துள்ளது. இதே வேலையை முந்தைய காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அரசுகளும் செய்தன.

முசாபர்நகர் கலவரத்தின்பொது சமாஜ்வாடி அரசாங்கம் மற்றும் பா.ஜ.க. இடைய தெளிவான புரிதல் இருந்ததால் பல உயிர்கள் பலியானதுடன், ஏராளமான சொத்துக்கள் சேதமடைந்தன. கலவரத்தின்போது இடம்பெயர்ந்த மக்கள் குறித்த அரசின் அணுகுமுறை உணர்வற்ற மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.