திமுக கூட்டணியில் இணைகிறதா எஸ்டிபிஐ கட்சி ?மாநிலத் தலைவர் தகவல்வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து பணியாற்றுவதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெறுகிறது என, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி தெரிவித்தார்.


திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமைமேலும் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வரும் சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் வகையில் 234 தொகுதிகளுக்கும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, கடையநல்லூர் ஆகிய தொகுதிகளுக்கான குழுக்கள் 2 மாதங்களுக்கு முன்பே அமைக்கப்பட்டு பணிகளைத் தொடங்கியுள்ளோம். வரும் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்த தேர்தல் நிலைப்பாட்டை ஒரு வாரத்துக்குள் அறிவிக்கவுள்ளோம். அதற்கு முன்பாக பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திமுக-வுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்துக்குப் பிறகே இறுதியான முடிவு அறிவிக்கப்படும் என்றார் அவர்.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.