சவூதி ரியாத்தில் இந்தியன் சோஷியல் ஃபோரம் அமைப்பின் மகத்தான மனிதநேய பணி!கன்னியாகுமரி மாவட்டத்தின் மேல்மிடாலம் பகுதியை சார்ந்த ஜெய சேகரன் என்ற சேகர் சவுதி அரேபியாவில் ஷீலாரஞ்சனி (மனைவி) ஆஷா பிரியதர்ஷினி (மகள்) ஆகியோரோடு குடும்பத்துடன் வேலை பார்த்து வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 8 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மிகவும் கஷ்டபட்டு வந்தவரை

ambulance 1

இந்தியன் சோஷியல் ஃபோரம்  சமூக நலத்துறை பொறுப்பாளர் ராஜா முஹம்மது மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பல்வேறு உதவிகளை செய்து வந்த நிலையில் கடந்த 17:2:2016 அன்று ஜெய சேகரன் மரணமடைந்தார்.

கணவரை பறி கொடுத்து திக்கற்று நின்ற அவரது மனைவி ஷீலாரஞ்சனி இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளை அணுகி தனது கணவரின் உடலையும் தங்களையும் தாயகம் அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைத்தார்.

இறந்தவரின் உடலையும் அவரது குடும்பத்தையும் தாயகம் அனுப்பி வைக்க சமூக நலத்துறை நிர்வாகிகள் கடும் முயற்சி மேற்கொண்டனர்.

தொடர் முயற்சியின் பலனாய் 29-2-2016 அன்று இறந்த ஜெய சேகரனின் உடலையும் அவரின் குடும்பத்தினரையும் ரியாத் விமான நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தகவலை கன்னியாகுமரி மாவட்ட SDPI தலைவருக்கு தெரிவித்தன் அடிப்படையில் இன்று காலை திருவனந்தபுரம் விமான நிலையம் சென்ற SDPI கட்சியின் மாவட்டதலைவர் சுல்ஃபிகர் அலி உடலை பெற்றுகொண்டார்.

பின்னர் திருவனந்தபுரம் SDPI கட்சியின் ஆம்புலன்சை வரவழைத்து உடலை சம்பந்தபட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஜாஹிர்ஹுசைன் திருவிதாங்கோடு நகர தலைவர் ஜாஃபர் SDTU மாவட்ட தலைவர் மணவை சாதிக் ஆகியோர் உடன் இருந்தனர்.

சவூதி அரேபியாவில் செயல்பட்டு வரும் சமூக நல அமைப்பான இந்தியன் சோஷியல் ஃபோரம் பல்வேறு சமூக நல பணிகளை SDPI கட்சியின் சமூக நல துறையின் வழிகாட்டலை மேற்கொண்டு சிறப்பாக செயலாற்றி இந்தியர்களின் துயர் துடைப்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.