சாம்பாரில் மனித பல்: சர்வருக்கு சதக்.. சதக்..சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(37), லாரி டிரைவர். இவர், அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டார். அப்போது சாம்பாரில் வெள்ளையாக ஏதோ கிடந்தது. பூண்டு பல்லாக இருக்கும் என நினைத்து கையில் எடுத்து பார்த்தார். ஆனால் அது மனித பல். அதிர்ச்சி அடைந்த முத்துப்பாண்டி இதுபற்றி சர்வர் பாலகிருஷ்ணனிடம்(23) கேட்டார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆவேசமடைந்த முத்துப்பாண்டி அருகில் இருந்த கத்தியை எடுத்து, பாலகிருஷ்ணனின் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பாலகிருஷ்ணனின் குடல் சரிந்து வெளியே தொங்கியது. மயக்கமடைந்த அவரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.