உணர்ந்தவை: வளைத்தளம் வைத்திருப்பவர்கள் எல்லாம் அறிஞர்கள் அல்ல.வளர்ந்த பிள்ளைகள் அதிகம் பெற்றோரிடம் பேசுவது "இவ்வளவு பணம் தேவைப்படும்" என்ற ஒரே வார்த்தை தான்.
வீட்டில் ஹவுஸ் ஒய்ஃபாக இருக்கும் பெண்கள் யாரும் ஆண்களுக்கு சம்பாத்யம் போதவில்லை என்று குற்றம் சாட்டுமுன் ஒருமாதம் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து விட்டு வந்து புத்திமதி சொல்லட்டும்.
வளைத்தளம் வைத்திருப்பவர்கள் எல்லாம் அறிஞர்கள் அல்ல.
எல்லா விசயத்திலும் விதியை காரணம் காட்டி தப்பிக்க முடியாது. நீங்கள் தான் அதை எழுதியது என்பது மற்றவர்களுக்கும் ஈசியாக தெரியும் இந்த காலத்தில்.
காலத்தால் மறக்கக்கூடாதது சமயம் அறிந்து செய்யப்பட்ட உதவி.
ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டிய பிறகு கணவன் மீதான கவனம் குறைந்து பிள்ளைகள் மீதான கவனம் அதிகம் ஆகும்போது கணவன் மனைவியிடையே எல்லா விசயத்துக்கும் ஈகோ உருவாகும். 'கணவன்' நொய்யல் பார்ட்டியாகவும் ' மனைவி ' சனியாக ' தெரிவதும் இந்த கால கட்டத்தில்தான்.
காலக்கட்டாயத்தால் தூரமாய்ப் போன உறவுகள் அதே அன்புடன் மறுபடியும் கிடைத்தால் அதுவே சந்தோசம். எதிர்பார்த்தால் ஏமாறவும் தயாராக இருக்க வேண்டும்.
எதையும் கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்வதால் மற்ற விசயங்களை மறைத்துவிடும்..உண்மையையும் சேர்த்துதான்.
Financial Independence என்பது பணம் சம்பாதிக்க பொறுப்பு எடுத்துக் கொள்வது.
ஒரே நதியில் எப்போதும் குளிக்க முடியாது – ZEN தத்துவம்.
வீட்டில் ரிட்டையர் ஆகி உட்கார்ந்த பெரியவர்களிடம் அதிகம் அறிவுரை வழங்கும் வீட்டுபெண்கள் ஒரு காலத்தில் அவருடைய சம்பாத்யத்தில்தான் தன் பசி ஆற்றப்பட்டது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.
சின்ன வயதில் ரொம்ப நாள் சம்பாதிக்காமல் இருப்பவர்களுக்கு சூடு சொரணை இவைகளை எந்த லேப் ரிப்போர்ட்டிலும் கண்டுபிடிக்க முடியாது.
வயதான காலத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை அதிகம் சார்ந்திருப்பது இந்த கால கட்டத்தில் அவ்வளவுக்கு சரியல்ல. பிள்ளைகள் வயதான காலத்தில் பெற்றோர்களை கண்டு கொள்ளாமல் இருப்பது அதைவிட தவறு.
உங்களை அதிகம் பாராட்டுபவர்களிடம் கவனம்.
தாய்ப்பாசம் பற்றி எழுதப்பட்ட அளவுக்கு தந்தை பாசத்தைப் பற்றி அவ்வளவாக கண்டு கொள்ளப்படவில்லை.
பொழுதுபோக்குக்கு அதிகம் நேரம் ஒதுக்கிய இளமை, முதுமையில் பொழுது போகாமல் யோசிக்க வைக்கப்படலாம்.
பணம் , பெண் இரண்டு விசயத்திலும் எந்த ஒருவனும் நிரந்தரமாக நல்லவனும் இல்லை , கெட்டவனும் இல்லை.
மார்க்க விசயத்தில் எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று பீத்துபவர்களின் பெர்சனல் வாழ்க்கை அவ்வளவுக்கு சொல்லிக்கொள்வது போல் இருக்காது.
உங்களின் முயற்சியில் எப்போதும் அவநம்பிக்கையை விதைக்க நினைப்பவர்கள் நரபலி சாமியார்களைவிட கொடுமையானவர்கள்.
எப்போது பார்த்தாலும் ' உங்க வீட்டு ஆட்கள்' என்று பிரித்துப்பேசும் தம்பதியினரிடம் அவ்வளவு அன்யோன்யம் இருக்காது. அப்படி இருந்தால் அது ஒரு பிசினஸ், தாம்பத்யம் அல்ல.
தரமற்றவர்களிடம் செய்யும் விவாதம் ஒரு வீண்வேலை
எப்போதோ செய்யப்போகும் வேலைக்கு இப்போதைக்கு டென்சன் வேண்டாம்.
நமக்கு பிரியாணி கிடக்கவில்லை என்று கவலைப்படும் வேலையில் ஆப்ரிக்கா நாடுகளில் மக்கள் வெகுதூரம் வெயிலில் தண்ணீருக்காக நடக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்க.
நாம் வாங்கி வந்த இந்த உடம்பே இரவல்தான் என்ற நிலையில் ஏன் நிறந்தரமில்லாத பல விசயத்தில் அனியாயத்துக்கு கவலை கொள்கிறோம்?
தேவையற்றவைகளை வாங்கி சேர்ப்பவன், தேவையான பொருளை விற்க நேரிடும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் கற்றுக் கொள்கிறோம், அல்லது வெற்றியடைகிறோம்..தோல்வியடைய வில்லை.

 

உணர்ந்தவை , ஜாஹிர் ஹுசைன்  அதிரை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.