முத்துப்பேட்டை அருகே பரபரப்பு பயணிகள் நிழற்குடையை காணவில்லை !...முத்துப்பேட்டை அருகே பயணிகளை நிழற்குடை நள்ளிரவில் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி செம்படவான் காடு பஸ் நிறுத்தம் அருகே பயணிகள் நிழற்குடை இருந்தது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கென 2 அறைகளாக இருந்த இந்த கட்டிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு அரிமா சங்கத்தால் கட்டி கொடுக்கப்பட்டது. பின்னர் முத்துப்பேட்டை பேரூராட்சி நிழற்குடையை பராமரித்து வந்தது.  தினமும் இதை நூற்றுக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வந்தனர். பயணிகளுக்கு பெரும் வசதியாக நேற்று முன்தினம் வரை இருந்த இந்த நிழற்குடை தீடீரென்று நேற்று காலை பார்த்த போது மாயமாகி இருந்தது. இதனால் பயணிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு நிழற்குடையை அடியோடு இடித்துவிட்டு அதன் இடிபாடு கழிவுகளை அள்ளி சென்று விட்டது தெரியவந்தது. நிழற்குடை இருந்த இடம் தரைமட்டமாக காட்சி அளிக்கிறது.

இதை இடித்தது யார், எதற்காக இடிக்கப்பட்டது, அதன் பின் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான டீ கடை இருந்ததால் அதன் பார்வை மறைக்கப்பட்டுள்ளது என்பதற்காக இடிக்கப்பட்டதா என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து  தகவல் அறிந்ததும் பேரூராட்சி அலுவலர்களும், நெடுஞ்சாலை துறையினரும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்து அப்பகுதியினரிடம் கேட்டபோது இடித்தது யாரென்று தெரியவில்லை என்று கூறினர். இதனால் இதன் பின்னணியில் இப்பகுதியை சோந்த முக்கிய பிரமுகர்களுக்கு தொடாபு இருக்கும் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பேருராட்சி  அலுவலர்கள் கூறுகையில், பொது மக்கள் இது குறித்து தகவல் தெரிவித்ததால் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டபோது மர்ம நபர்கள் நிழற்குடையை இடித்து தரமட்டமாக்கி இருப்பது தெரியவந்தது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று செயல் அலுவலா வந்ததும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க இருக்கிறோம் என்றனர். இரவோடு இரவாக நிழற்குடைய மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

12108755_458140171043804_9006252681752929263_n
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.