மகளை கடத்திய தந்தைக்கு வலைபெரம்பூர்: மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், மகளை கடத்திய தந்தை உள்பட 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொடுங்கையூர், காந்தி நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆரோக்கிய விமல் (35). இவரது மனைவி ஜான்சிராணி (30). இவர்களது மகள் திசர்வினா (3). கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. திசர்வினா தாயுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ஜான்சிராணியின் தந்தை ேஜாசப், திசர்வினாவை கொடுங்கையூர் காமராஜர் சாலையில் உள்ள பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது, ஆரோக்கிய விமல் உள்பட 4 பேர் கொண்ட கும்பல் ேஜாசப்பை தாக்கிவிட்டு, குழந்தையை காரில் கடத்தி சென்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, ஜான்சிராணி கொடுத்த புகாரின் பேரில், கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து ஆரோக்கிய விமல் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.