சில பெண்கள் ஏன் திருமணம் செய்ய பயப்படுகிறார்கள்.திருமணம் என்றாலே சில பெண்கள் ஏதோ கரப்பான்பூச்சி, பல்லியை கண்டது போல அலறியடித்துக் கொண்டு ஓடுவார்கள். இதை பயம் என்றும் கூறலாம், முதிர்ச்சியின்மை என்றும் கூறலாம். பெரும்பாலும் தனிப்பட்ட காரணம் ஏதேனும் வைத்து தான் பெண்கள் தங்களது திருமணத்தை தள்ளிப் போட பார்கிறார்கள்.


புதிய இடத்திற்கு செல்ல பயப்படுவது, தன் தனிமை மற்றும் தனிப்பட்ட பக்கத்தை மற்றொரு நபருடன் பகிர்ந்துக் கொள்ள தயங்குவது, இலட்சியங்கள் நிறைவேறும் வரை திருமணம் வேண்டாம் என உறுதிக் கொள்வது என பெண்கள் திருமணம் வேண்டாம் என கூறுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன

புகுந்த வீடு.

புகுந்த வீடு, புது நபர்கள், புதிய உறவுகள், புதிய இடம். எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பார்கள், நமது நடவடிக்கை, குணாதிசயங்ககளை ஏற்றுக் கொள்வார்களா என்ற பல கேள்விகள் பெண்களின் மனதில் எழுகின்றன.


தனிமை.

சில பெண்கள் தனியாக வாழ தான் விரும்புவர்கள். அவர்களால் நண்பர்களுடன் இருக்கும் அளவிற்கு, மற்றொரு தனி நபருடன் தன் வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள முடியாது என எண்ணுவார்கள். இந்த எண்ணம் குறையும் வர அவர்களுக்கு திருமணம் என்றால் அழற்சி போல தான் தோன்றும்.


இலட்சியம்.

ஆண்களுக்கு மட்டுமல்ல, இப்போது பெண்களுக்கும் நிறைய இலட்சியங்கள், குடும்ப பொறுப்புகள் என பலவன கொண்டிருக்கிறார்கள். இவை நிறைவேறும் வரை திருமணத்தை தள்ளி போடலாம் என எண்ணலாம்.


ஆண் ஆதிக்கம்.

சில பெண்கள் திருமணம் செய்துக் கொண்டால் ஆண் ஆதிக்கம் அதிகமாக இருக்கும், தங்களது சுதந்திரம் பறிபோய்விடும், தனித்து எந்த செயலையும் ஈடுபட முடியாது என கருதி திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள்.


வீட்டு சூழல்.

வீட்டை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும். நாம் திருமணம் செய்துக் கொண்டால், அப்பா, அம்மாவை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தின் காரணத்தினாலும் கூட சில பெண்கள் திருமணத்தை தள்ளிப் போடுவது உண்டு


தயாராகுதல்.

சில பெண்கள் மனதளவிலும், உடலளவிலும் தாங்கள் திருமணத்திற்கு தயாராகவில்லை என்பதால் திருமணம் என்றால் இப்போது வேண்டாம் ஓரிரு வருடங்கள் போகட்டும் என கூறுகிறார்கள்.


நாட்டம்.

தாம்பத்தியம் அல்லது இல்லறம் சார்ந்த உறவில் நாட்டம் குறைவாக இருப்பது. பெற்றோர், சகோதர, சகோதரிகளை பிரிய மறுப்பது போன்றவையும் கூட பெண்கள் திருமணத்தை கண்டு பயப்படுவதற்கும், தள்ளிப் போடுவதற்குமான காரணமாக இருக்கின்றன.


இது போன்ற பயனுள்ள தகவல்களை எங்களது மக்கள் நண்பன் www.makkalnanpan.com இணையத்தளதில் நீங்கள் வாசிக்கும் போது அதன் மூலம் கிடைக்ப் பெறும் அறிவை நீங்கள் மாத்திரம் தக்கவைத்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் பகிர்ந்து நன்மையைத் தேடிக் கொள்ளுங்கள்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.