பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு புதிதாக வீல் சேர், ஸ்டிரெக்சர்கள்பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பாரத ஸ்டேட் வங்கி சமூக சேவை மையம் சார்பில் நான்கு வீல் சேர்கள் மற்றும் நான்கு ஸ்டிரெக்சர்கள் வழங்கப்பட்டது. இதற்கான விழா மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். விழாவில், வங்கியின் முதன்மை மேலாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசுகையில், வங்கியின் லாபத்தில் ஒரு பகுதியை சமுதாய மேம்பாட்டிற்கு செலவிடப்படுவதாக தெரிவித்தார்.

4 வீல் சேர்களை வங்கியின் சிறப்பு வாடிக்கையாளர் இன்ஜினியர் வசந்த சேகரனும், 4 ஸ்டிரெக்சர்களை ரகுவும் வங்கியின் சார்பாக தலைமை மருத்துவர் மற்றும் நிர்வாக அதிகாரி பாலச்சந்தரிடம் வழங்கினர். விழாவில் மருத்துவர் பிரசன்னா, மருந்தாளர் உலகநாதன், அண்ணாத்துரை, வங்கியின் தனிநபர் பிரிவு மேலாளர் குப்புசாமி, கடன் பிரிவு மேலாளர் ஜானகிராமன், அதிகாரி ராஜராஜன் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.