திருச்சி விமான நிலையத்தில் விரைவில் சர்வதேச கூரியர் சேவை !



திருச்சி விமான நிலையத்தில் சர்வதேச கூரியர் சேவை விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

திருச்சி விமான நிலையம் சர்வதேச தர உயர்வுக்கு முன்பே, சுங்கத்துறை விமான நிலையம் என்ற சிறப்பு அந்தஸ்தில் வெளிநாட்டு விமானப் போக்குவரத்தையும் நடத்தி வந்தது. இதையொட்டி, சர்வதேச கூரியர் போக்குவரத்து சேவைக்கு பல ஆண்டுகளாக அனுமதி கோரப்பட்டு வந்தது. 

இதை ஏற்று கடந்த 2013-ல் சர்வதேச கூரியர் சேவைக்கான அனுமதியை சுங்கத்துறை அளித்தது. ஆனால், உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் தாமதம் நிலவி வந்தது. 

இது தொடர்பாக கூரியர் முகவர்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் சுங்கத்துறை ஆகியன இணைந்து சர்வதேச கூரியர் முனைய உள்கட்டமைப்பு பணிகளை தொடங்க முடிவுசெய்தன. இதற்கென பழைய முனையத்தில் கார்கோ மையத்துக்கு அருகே சர்வதேச கூரியர் முனையமும் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. சுமார் 1,500 சதுர மீட்டர் பரப்பளவில் தினசரி 1 முதல் 3 டன் வரை கூரியர் தபால் மற்றும் பார்சல்கள் கையாளும் விதமாக கூரியர் முனையம் அமைக்கப்படுகிறது. 

சுங்கத் துறை விதிமுறைகளின் கீழ் இயங்கவுள்ள இந்த சர்வதேச கூரியர் முனையத்தில் ஒரு பார்சல் அதிகபட்சம் 70 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கென பிரத்யேகமாக நவீன ஸ்கேனர், மற்றும் கணினி சாதனங்கள் அமைக்கப்பட்டு சுமார் 2 மாதத்திற்குள் கூரியர் சேவை தொடங்கப்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இவற்றின் மூலம் தங்கம், நவரத்தினங்கள், ரூபாய் நோட்டுக்கள் உள்ளிட்ட சுங்கத்துறையால் தடைசெய்யப்பட்ட பொருட்களை அனுப்ப இயலாது. தவிர உணவுப்பொருள்கள், மருந்துகள், அன்பளிப்புகள் உள்ளிட்டவற்றை துரிதமாகவும் கார்கோவை ஒப்பிடுகையில் குறைவான கட்டணத்திலும் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும். இதுகுறித்து கூரியர் முகவர்கள் சங்க நிர்வாகி சையது கூறுகையில், சர்வதேச கூரியர் சேவை தொடங்க பல ஆண்டுகளாக காத்திருந்த நிலையில் தற்போது அதற்கான பணிகளை விமான நிலைய ஆணையம் மற்றும் சுங்கத்துறை இணைந்து மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரம், ஏற்றுமதியைப் போலவே கூரியர் தபால்கள் மற்றும் பார்சல்களை இறக்குமதி செய்து விநியோகிக்கவும் தேவையான அனைத்து உதவிகளையும் ஆணையம் செய்யவேண்டும் என்றார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.