அதிரை அப்துல்லாஹ் ஆலிம் குறித்து இலங்கை பெண்மணி எழுதிய நெகிழ்ச்சி கட்டுரைநான் வாழ்கையில் 3 தடவை மழைவேண்டி ஸலாத் அல் இஸ்திஸ்கா தொழுகையில் கலந்துகொண்டிருக்கிறேன்.

அந்த மூன்று தொழுகையிலும் இமாக நின்று தொழுவித்ததும் கொத்பா ஓதியதும் செய்ஹுல் பலாஹ் அஸ் ஸெய்க் அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்கள்தான். மக்கள் கொழுத்தும் அந்த வெயிலிலும் எந்த சந்தேகமும் இன்றி… தொழுது முடிந்ததும் மழை வரும்.


நனையாமல் இருக்க குடை வேண்டும் என மறவாது கையோடு குடைகளையும் கொண்டுவந்திருந்தனர்.

கொழுத்தும் வெயிலில் தன் ஆடைகள் வியர்வையால் நனைய… முகங்களிலும் கழுத்துப்புறங்களிலும் முத்து முத்தாய் வியர்வை துளிகள் படர தொழுகையை நடத்தி கொத்பாவையும் ஓதி முடிப்பார்கள் பெரிய ஹஸரத். அவர்களது கொத்பா மிகச்சுருக்கமாக இருக்கும்.

வெவ்வேறு ஆண்டுகளில் இந்த மூன்று தொழுகையும் நடைபெற்று இருந்தாலும் அவர்களது கொத்பாவின் சாராம்சம் மூன்று தடவையும் ஒரே விடயந்தான்.

“உரிமைகளை கேட்கமுன்னர் கடமைகளை செய்யுங்கள்.” “கடமைகளை செய்யாவிட்டால் விசாரணை உண்டு.”

“உரிமைகளை அறிந்திருப்பது போன்று நம் கடமைகளை அறிந்திருப்பதும் அதனை சரியான முறையில் நிறைவேற்ற அக்கறை எடுத்து பாடுபடுவதும் அவசியம்.” “உரிமைகள் கிடைகாமல் போனால் அது நாளை கியாமத்தில் நமக்கு நன்மையாக வந்து சேரும்.” “கடமைகளை செய்யத்தவறுவோமெனில் கியாமத்தில் தப்ப முடியாத நிலை ஏற்படலாம். ”

அவரது கொத்பா முடிந்ததும் துஆ கேட்பார்கள்.

துஆ முடிந்ததும் மக்கள் கலைந்து செல்வார்கள்.

மக்கள் அந்த மைதானத்தை விட்டு கலையும்போதே மேகங்கள் கூடி கருத்து மழை மெதுவாக பொழிய ஆரம்பிக்கும்.

மக்கள் வீடுகளை அடைய முன்னறே அடைமழையாக அந்த மழை உருவெடுக்கும்.

அந்த மூன்று தடவையுமே மழை பொழியும் என்ற நம்பிக்கையில் கையோடு குடைகளை சுமந்துவந்த மக்களின் நம்பிக்கையை பொய்யாக்காமல் தொழுத அந்த இஸ்திஸ்கா தொழுகை மழையை கொண்டுவந்து சேர்பித்ததை வாழ்கையில் மறக்கவே முடியாது. மக்கள் அனைவரும் ஒருமுகமாய் அவன் பக்கம் திரும்பினால் அவன் இரக்கம் கொள்ளத்தவறுவதே இல்லை…!
-Fashlin Mohamed
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.