முத்துப்பேட்டையில் மினி வேன் தீ வைத்து எரிப்புமுத்துப்பேட்டையில்மினி வேன் தீ வைத்து எரிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பக்கிரிவாடி தெருவை சேர்ந்த அப்துல் கரீம் மகன் ஹாஜா மைதீன் (34). சொந்தமாக மினி வேன் வைத்து தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகளை ஏற்றி சென்று வருகிறார். மேலும் ஆட்டோவும் ஓட்டி வருகிறார்.  நேற்றுமுன்தினம் மாலை பள்ளிகளில் இருந்து குழந்தைகளை மினிவேனில் ஏற்றி சென்று வீடுகளில் இறக்கி விட்டார்.

பின்னர் வீட்டிற்கு அருகில் தெருமுனையில் மினிவேனை நிறுத்தி வைத்திருந்தார்.நள்ளிரவு மினிவேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். தகவலறிந்த தீயணைப்–படையினர் வருவதற்குள் வேனின் பெரும் பகுதி எரிந்து சேதமடைந்தது.மர்ம நபர்கள் பெட்ரோல் டேங்க்கை உடைத்து தீ வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து ஹாஜா மைதீன் கொடுத்த புகாரின்பேரில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து தொழில் போட்டியா அல்லது திட்டமிட்ட சதியா என விசாரணை நடத்தி வருகிறார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.