கருணாநிதி- விஜயகாந்த் கூட்டணி பேசினா எப்படி இருக்கும்? சிங்கமுத்து மிமிக்ரி - வீடியோ இணைப்புசென்னை: 'கிங்' கனவில் இருக்கும் விஜயகாந்த், திமுக தலைவர் கருணாநிதியுடன் கூட்டணி பற்றி பேசினால் எப்படி இருக்கும் என்று மிமிக்ரி செய்து கிண்டலடித்துள்ளார் அதிமுக நட்சத்திர பேச்சாளர் சிங்கமுத்து. விஜயகாந்த் பேசும் பேச்சு அவருக்கு மட்டுமே புரிந்த பாஷை... எங்கேயோ ஆரம்பித்து... எதற்கோ கொண்டுபோய், எதையோ டச் செய்து மெதுவாக டாபிக்கில் வந்து பினிஷ் செய்வார்.

இப்படித்தான் காஞ்சிபுரம் மாநாட்டில் பேசிய போது, பழைய சோறு, பச்சை வெங்காயத்தில் ஆரம்பித்து புதிய தலைமுறையின் கிச்சன் கேபினட்டை கிண்டலடித்தார் விஜயகாந்த். சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தமிழகத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் விஜயகாந்தின் மேடை பேச்சையும், கூட்டணி பேச்சையும் கிண்டடித்துள்ளார் அதிமுக பேச்சாளர் சிங்கமுத்து. விஜயகாந்த் பேசுவது மக்களுக்கு புரியணுமே அப்புறம்தானே அவர் முதல்வராகணுமா வேண்டாமா என்று மக்கள் முடிவு செய்வார்கள் என்று கேட்கும் சிங்கமுத்து, விஜயகாந்தின் பேச்சை மிமிக்ரி செய்துள்ளார் நீங்களும் பாருங்களேன்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.