ஆச்சரியம் ஆனால் உண்மை - கண்,மூக்கு, காதுகளில் இருந்து நிற்காமல் ரத்தம் வழியும் இளம் பெண்இங்கிலாந்தின் ஸ்டோக் ஆன் டிரெண்ட் நகரை சேர்ந்தவர்  மெரினி கார்வே ( வயது 14 ). 14 வயது ஆகும் வரை மற்றபெண்களைபோலவே  பெண்கள் போலவே வாழ்ந்து வந்தார். ஆனால், 2013ம் ஆண்டில் இருந்து இவருக்கு ஒவ்வொரு அதிசய சம்பவங்கள் ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருநாள் படுக்கையில் இருந்த எழுந்தபோது, அவரது தலையணையில் ரத்த வழிந்துள்ளதை பார்த்து வியப்படைந்த கண்ணாடியில் தனது முகத்தை பார்த்துள்ளார்.

அப்போது, அவரது மூக்கில் இருந்தும் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து உடனடியாக தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
மகளின் முகத்தை கண்டு கண்ணீர் வடித்த தாயார் அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டது.ஆனால், அவரது உடலில் எந்தவித நோயும் இல்லை என தெரிய வந்தது. ஆனால் ரத்தம் வடிவது நிற்கவில்லை.

கடந்த் 3 ஆண்டுஜ்களால் ரத்தம் அவ்வபொது வழிந்து கொண்டுதான் இருக்கிறது.பின்னர் ஒருநாள் திடீரென அவரது கண்ணில் இருந்து ரத்தம் வடிய தொடங்கியுள்ளது. கண்ணை தொடர்ந்து காது, விரல் நகங்களிலிருந்து உச்சந்தலையில் இருந்து என ரத்தம் வழிந்ததை கண்டு அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதற்காக பிறகு பல்வேறூ  மருத்துவனைகளில் பரிசோதனை செய்தும் இதற்கான காரணத்தை கண்டறியமுடியவில்லை.ஒரு நாளில் 5 முறை இவ்வாறு ரத்தம் வழிவதால், அவர் நண்பர்களுடன் வெளியே செல்வதையே நிறுத்தி விட்டு தற்போது வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார். சமூக வலைத்தளங்களில் தனது நிலையைக் கூறி அதற்கான தீர்வை கேட்டு வருகிறார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.