முத்துப்பேட்டை அருகே குளத்தில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்முத்துப்பேட்டை அருகே குளத்தில் மர்மமான முறையில் வாலிபர் இறந்து கிடந்தார். முத்துப்பேட்டை மேலநம்மங்குறிச்சி பெரியார் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (32). விவசாய தொழிலாளியான இவர் 2 ஆண்டுகளுக்கு முன் சிரமேல்குடியை சேர்ந்த ஆனந்தநாயகியை திருமணம் செய்தார். குழந்தை இல்லாத நிலையில் 3 மாதங்களுக்கு முன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவனிடமிருந்து கோபித்து கொண்டு ஆனந்தநாயகி, தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று மதியம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு எதிர்புறம் உள்ள வெள்ளக்குள படித்துறையில் குணசேகரனின் செருப்பு மற்றும் துணிகள் இருந்தது. மேலும் அவரது பைக்கும், குளக்கரையில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியினர், குளத்தில் இறங்கி பார்த்தனர். அப்போது குளத்தில் குணசேகரன் சடலமாக மிதந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் குணசேகரின் உடல் குளத்திலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் குணசேகரன் நேற்று காலை 10 மணிக்கு குளத்துக்கு குளிக்க சென்றுள்ளார். அவரது தலையில் சிறு காயங்கள் உள்ளதால் தவறி விழுந்து இறந்தாரா, அல்லது யாரேனும் அவரை தாக்கி தண்ணீரில் அமுக்கி கொலை செய்து விட்டனரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.