சி.பி.எம். தொண்டர்களை கொலை செய்ததில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கைதுகேரள மாநிலம் மலம்புழாவில் உள்ள கடுக்கம்குன்னு பகுதியில் இரண்டு சி.பி.எம் தொண்டர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் குற்றவாளிகள் என்று நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் பாலக்காட்டின் நீதிபதி சுரேஷ் குமார் பவுல் திங்கள் அன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மணிகண்டன், ராஜேஷ், முருகதாஸ், சுரேஷ், கிரீஷ் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.இவர்கள் இரண்டு சி.பி.எம். தொண்டர்களை கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இந்த கொலையில் தொடர்புள்ளதாக கூறப்பட்ட இன்னும் இரண்டு பேரை போதிய ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை என்னவென்று புதன் கிழமை அறிவிக்கப்படும். அரசியல் விரோதத்திர்க்காக இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.