நம்பினால் நம்புங்கள்- இது வெல்லாம் உங்களுக்கு தெரியுமா?…



*ஜெல்லி ஃபிஷ், லாப்ஸ்டர் – இவை இரண்டுக்கும் ரியல் ரீதியாகவோ, வயது காரணமாகவோ இறப்பில்லை. யாரேனும் கொன்றால்தான் சாகும்!

*சாக்லெட் சாப்பிடுகையில் மகிழ்ச்சி ஏற்படுவதற்குக் காரணம் அதிலுள்ள   phenylethylamine   எனும் ஹார்மோன். இதே ஹார்மோன்தான் காதல் வயப்படுகையிலும் சுரக்கிறது!

*தும்மல் ஏற்படும் அந்த நொடிப்பொழுதில், இதயம் உள்பட உடலின் அனைத்துப் பகுதிகளும் இயக்கத்தை நிறுத்தி விடுகின்றன.

*முத்தமிடும்போது, மூளையில் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இதுவே இருவருக்கான பந்தத்தை உறுதிப்படுத்தும் உணர்வை அளிக்கிறது.

*1904ல் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடந்த உலகப் பொருட்காட்சியில்தான், கோன் ஐஸ்க்ரீம் அறிமுகப்படுத்தப்பட்டது.

*இறந்த பிறகும் தலைமுடியும் நகங்களும் வளரும் என்பது மாயையே. உடல் உலர்வதால்தான் இப்படித் தோன்றுகிறது.

*மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய வெதுவெதுப்பான நிறங்களுக்குப் பசி தூண்டும் தன்மை உண்டு. அதனால்தான் பல ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் இந்த நிறங்கள் ஜொலிக்கின்றன.

*ஆத்ம நண்பர்களால் தங்கள் எண்ணங்களையும் கனவுகளையும் டெலிபதி முறையில் பரிமாறிக்கொள்ள முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

*கர்ப்ப காலத்தில் பெண்ணின் மூளை லேசாகச் சுருங்கும். மீண்டும் பழைய அளவை அடைய 6 மாதங்கள் ஆகும்.

*துணிகளில் படிந்துள்ள ரத்தக்கறையை கோக கோலா கொண்டு நீக்க முடியும்!

*1933ல் ‘மண்டா ரே’ எனும் அரிய வகை மீன் பிடிக்கப்பட்டது. அதன் எடையோ 2,500 கிலோவுக்கும் அதிகம். அகலமோ 20 அடி!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.