குவைத்தில் உயிருக்கு போராடிய தமிழக வாலிபர், சென்னை அழைத்து வரப்பட்டார் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்ன் மனிதநேய செயல்தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 27). இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கார் டிரைவர் வேலைக்காக குவைத்துக்கு சென்றார். கடந்த டிசம்பர் மாதம் குவைத்–சவுதி அரேபியா எல்லையில் தங்கி இருந்த போது, ‘ஹீட்டர்’ வெடித்ததில் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் குவைத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இது பற்றி அவரது தந்தை பன்னீர்செல்வம், தாய் மலர்கொடி ஆகியோர் தஞ்சாவூர் மாவட்ட தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளிடம் முறையிட்டனர். அவர்கள், குவைத்தில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டனுக்கு உதவி செய்தனர். உடல் நலம் ஒரளவு குணமடைந்ததும் மணிகண்டனை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குவைத் நிர்வாகி இலியாஸ் குவைத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் மணிகண்டனை அவரது தாய் மலர்கொடி, தந்தை பன்னீர்செல்வம், தங்கை ஐஸ்வர்யா ஆகியோர் கண்ணீர் மல்க வரவேற்றனர். ‘‘உயிருக்கு போராடிய தன்னை காப்பாற்ற இந்திய தூதரக அதிகாரிகள் யாரும் உதவி செய்யவில்லை. தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்’’ என மணிகண்டன் கோரிக்கை விடுத்தார்.

பின்னர் மணிகண்டனை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.