மறுமலர்ச்சி தமுமுக கலைக்கப்பட்டு, தாய் கழகம் தமுமுக வில் இணைக்கப்பட்டது.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சமுதாய சொந்தங்களே ...!
முஸ்லிம் சமுதாயம் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வரும் இன்றைய காலகட்டத்தில் சிறிய சிறிய அமைப்புகளாக ஏதோ சில காரணங்களுக்காக சமுதாயம் சிதறடிக்கப்பட்டள்ளது . ஒற்றுமையின்மையால் அரசியலில் நமக்கான அங்கீகாரம் மறுக்கப் பட்டு வருகிறது. சங்பரிவார பாசிஸ்ட்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை அனைவரும் உணர்ந்து வருகிறோம்.
இந்நிலையில் தான் மறுமலர்ச்சி தமுமுக வுக்கு எங்கள் தாய்கழகம் தமுமுக -மமக வின் பாசக்கரம் நீட்டப்பட்டு , இனிய முறையில் பேச்சுவார்த்தைகள் நடந்தது. அன்பு நண்பர் மாயவரம் அமீன் , பேராசிரியர் ஹாஜாகனி ஆகியோரின் அழகிய அணுகுமுறையினால் பேச்சுவார்த்தை தொடர்ந்தது . மாஷா அல்லாஹ்.
மறுமலர்ச்சி தமுமுக வின் அனைத்து மாநில நிர்வாகிகளின் ஏகோபித்த முடிவு மற்றும் பலகட்ட ஆலோசனைககளுக்கு பிறகு தான் தமுமுக வில் இணைத்து விடுவது என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது. எடுக்கப்பட்ட முடிவை அனைத்து மாவட்ட,நகர ,ஒன்றிய கிளைகழக நிர்வாகத்திடமும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இணைப்பு நிகழ்விற்கு முன்பாக சென்னையில் மாநில நிர்வாகிகளில் ஆறுபேர்களில் ஐந்து பேர்கள் கூடிய மாநில நிர்வாக குழுவும் , தனித்தனியாக மாவட்ட நிர்வாகிகளுடனான சந்திப்பும் நடைபெற்றது.
பின்னர் மாலை 7 மணியளவில் மாநில அமைப்பாளரான எனது தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் புளியங்குடி சையது அலி,மௌலவி யூசுப் எஸ்.பி, செங்கை பாஷா மற்றும்
மறுமலர்ச்சி தமுமுக வின் முறையாக நிர்வாக கட்டமைப்பு உள்ள மாவட்டங்களான வட சென்னை ,தென் சென்னை , வேலூர் (திருப்பத்தூர்) , திருப்பூர் மாநகர் , திருப்பூர் புறநகர் , பெரம்பலூர் ,ஈரோடு , நெல்லை மாவட்ட சகோதரர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுடன் தாய் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு சென்று இணைப்பு விழா நடந்தது .
தமுமுக - மமக வின் மாநில நிர்வாகிகளான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் , சகோதரர் ஹைதர்அலி ,மௌலவி ரிபாயி ,அண்ணன் O.U ரஹ்மத்துல்லாஹ் , அப்துல் சமது ,ஹாஜாகனி, கோவை உமர் , அன்பு நண்பர் மாயவரம் அமீன் , ஹூசைன் கனி, புழல் ஷேக், சலாம் பாய் உள்ளிட்ட நிர்வாகிகள் எங்களை வரவேற்று சிறப்பித்ததனர்.
தமுமுக வின் அழைப்பை ஏற்றும் சமூகத்தின் நலன் கருதியும் எவ்வித நிபந்தனைகளுமின்றி இந்த இணைப்பு நடைபெற்றுள்ளது. சமூகத்தின் ஒற்றுமைக்காக எங்களால் முடிந்த பங்களிப்பை செய்திருக்கிறோம். தொடர்ந்து சமூகப் பணிகளை தொய்வின்றி ஆற்றிட துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வழக்கறிஞர்.ஜைனுல் ஆபிதீன்.
முன்னாள் மாநில அமைப்பாளர்
மறுமலர்ச்சி தமுமுக.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.