ஆணவக்கொலைகள் கண்டிக்கத்தக்கது – நீதிபதி அக்பர் அலிசாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக நடைபெறும் ஆணவ கொலைகள்  கண்டிக்கத்தக்கவை என சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி கூறியுள்ளார்.

“ஆணவக்கொலைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” என்ற தலைப்பில்  மதுரை சோக்கா அறக்கட்டளை, சிவராஜ் பாட்டீல் அறக்கட்டளை சார்பில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நீதிபதி அக்பர் அலி, மனித உரிமையும், பெண்ணுரிமையும் காக்கப்பட வேண்டியவை என்றார். இதனை புரிந்து கொண்டால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆணவக் கொலைகள் சமூகம் சீரற்ற நிலையில் இருப்பதை காட்டுவதாக தெரிவித்த அக்பர் அலி, சாதிய படுகொலைகள் குறித்து மாணவர்களிடையே அதிகம் பேசக்கூடாது என்றும், இருந்த போதும் சாதிக்கு எதிராக நடைபெறும் ஆணவக்கொலைகள் கண்டிக்கத்தக்கவை என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் சமுக அமைப்பினர் கலந்து கொண்டனர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.