புதிதாக சவுதிக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு ஓர் நற்செய்தி



புதிதாக சவுதிக்கு வரும் தொழிலாளர்களுக்கு அவர்களின் தொலைபேசியில் உபயோகிப்பதற்கு சவுதி தொழிலாளர் அமைச்சகத்தால் இலவசமாக SIM கார்டு கொடுக்கப்படுகின்றது.


அதில் சவுதிதொழிலாளர் உரிமை, கடமை, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் சட்டபூர்வமான விழிப்புணர்வுகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். மேலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு இணைப்புகளும் குறிப்பிட்ட அளவிற்கு இலவசமாக கிடைக்கும்.


இதன் மூலம் தொழிலாளர்கள் அமைச்சகத்தையும், தூதரகத்தையும் தொடர்பு கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. உதவிக்கு 19911 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.


உதவிக்காக 24 மணிநேரமும் சேவையாற்றும் இந்த வசதி புதிதாக வரும் தொழிலாளிகளின் நலன் கருதி தொடங்கப்பட்டுள்ளதாகவும், ரியாத்தில் தொடங்கியுள்ள இந்த சேவை ஏனையப் பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இதனை தொடங்கி வைத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.