நாச்சிகுளம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு 'ஹால் டிக்கெட்' மற்றும் பொருட்கள் வழங்கி வழியனுப்பும் நிகழ்ச்சிதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 'ஹால் டிக்கெட்' மற்றும் தேர்வுக்கு தேவையான வகையான பொருட்கள் வழங்கி வழியனுப்பும் நிகழ்ச்சி தலைமையாசிரியர் ரெத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாச்சிகுளம் தாஹீர் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் மற்றும் தேர்வுக்கு தேவையான 7-வகையான பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் அழகிரிசாமி, கல்விக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், தங்கராஜன் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர.;


படம் செய்தி
முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 'ஹால் டிக்கெட்' மற்றும் 7-வகையான பொருட்களை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாச்சிகுளம் தாஹீர் வழங்கி துவக்கி வைத்தார். அருகில் ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன், தலைமையாசிரியர் ரெத்தினசாமி ஆகியோர்.


 

 

முத்துப்பேட்டை   மு.முகைதீன்பிச்சை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.