’எஸ்டிபிஐ கட்சி திமுகவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும்’



வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெஹலான் பாகவி, திமுகவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அவர், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை பின்னர் தொடங்கும் என தெரிவித்தார்.

முன்னதாக திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , மனித நேய மக்கள் கட்சியைத் தொடர்ந்து தற்போது எஸ்டிபிஐ கட்சியும் இணைந்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.