மனச்சோர்வை போக்கும் சப்போட்டா பழம்!பல், கால் வலியை குணப்படுத்த கூடியதும், வீக்கத்தை வற்றச் செய்யும் தன்மை கொண்டதும், மனச்சோர்வை போக்க கூடியதும், தலைசுற்றல், தூக்கமின்மை போன்றவற்றுக்கு மருந்தாக அமைவது சப்போட்டா. கோடைகாலத்தில் அதிகளவில் கிடைக்கும் சப்போட்டா பழத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன. இதன் இலை, பூக்கள், விதைகள் மருந்தாகிறது. சப்போட்டா உற்சாகம் தரும் உணவாக விளங்குகிறது. உறக்கத்தை வரவழைக்க கூடியது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது.

சப்போட்டா இலைகளை பயன்படுத்தி பல், கால் வலிக்கான மருந்து தயாரிக்கலாம். 5 முதல் 10 சப்போட்டா இலைகளை துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடித்துவர பல் வலி, தலைவலி, கால் வலி சரியாகும். சப்போட்டாவின் இலைகள் பல்வேறு மருத்துவ குணங்களை பெற்றுள்ளது.

சீல்பிடிக்காமல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. வீக்கத்தை வற்ற செய்யும். வலியை குறைக்கும். நுண்கிருமிகளை அழிக்கும். சப்போட்டா இனிமையான உணவாகிறது. இதமான மருந்தாகிறது. பித்தத்தினால் ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் இருப்பவர்கள், சப்போட்டா பழத்தின் சதையை எடுத்து இரவில் நெய்யில் நனைத்து வைக்கவும். காலையில் இந்த சப்போட்டாவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர தலைசுற்றல், மயக்கம் சரியாகும்.

வெயிலால் ஏற்படும் சோர்வை இது போக்கும். சப்போட்டாவை பயன்படுத்தி தூக்கமின்மை, மன அழுத்தத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சப்போட்டா பழம், நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு, காய்ச்சிய பால். சப்போட்டா பழத்தின் சதை பகுதியை பசையாக்கி, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். இதனுடன் காய்ச்சிய பால் சேர்க்கவும். இரவு நேரத்தில் படுக்க செல்லும் முன் இதை சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

வெயிலால் ஏற்படும் சோர்வை சப்போட்டா போக்கும். தூக்கத்தை தூண்டக் கூடியது. இதில் உள்ள பொட்டாசியம், இரும்பு சத்து புத்துணர்வை தருவதுடன், ஆரோக்கியமான மனநிலையை கொடுக்கிறது. சப்போட்டாவை பயன்படுத்தி பேதிக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் சப்போட்டா பழத்தின் பசையுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து 3 வேளை சாப்பிட்டுவர மாதவிலக்கு சமயத்தில் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். வயிற்றுபோக்கு, அடிவயிற்று வலிக்கு மருந்தாகிறது.

சப்போட்டா இலையை பயன்படுத்தி தலைவலிக்கான மருந்து தயாரிக்கலாம். சப்போட்டா இலைகளை தேங்காய் அல்லது விளக்கெண்ணெய் விட்டு லேசாக சூடுபடுத்தவும். பின்னர், இதமான சூட்டுடன் நெற்றி மீது பத்தாக வைத்து கட்டவும். அரை மணி நேரத்துக்குள் தலைவலி குறையும். ஊட்டச்சத்துகள், புரதம் கொண்ட சப்போட்டாவை சாப்பிட்டுவர நல்ல பலன் கிடைக்கும்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.