முத்துப்பேட்டை அருகே ஓட்டத்தெரியாமல் தறிக்கெட்டு ஓடிய டிராக்டர் மோதி வி.ஏ.ஓ.உதவியாளர் பரிதாபப்பலி.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த வேப்பஞ்சேரி கீழத்தெருவைச் சேர்ந்தவர் இடும்பன் மகன் அருள்முருகன்(38). இவர் கள்ளுக்குடி கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டு கள்ளுக்குடி மெயின் ரோடு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி எதிரே சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது பின்புறம் ஓட்டத்தெரியாமல் தறிக்கெட்டு ஓடிய வந்த டிராக்டர் அருள்முருகன் மீது மோதி சாலை ஓரம் உள்ள குளத்திற்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் வி.ஏ.ஓ. உதவியாளர் அருள்முருகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த எடையூர் இன்ஸ்பெக்டர் முருகன் அருள்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வதை;தார். பின்னர் நடந்த விசாரணையில் விபத்து ஏற்பட்ட டிராக்டர் வினோத் என்பவருக்கு சொந்தமானது என்றும், டிராக்டரை ஓட்டி வந்தவர் நெடும்பலத்தைச் சேர்ந்த முத்து கிருஷ்ணன் மகன் கோபால கிருஷ்ணன்(17) என்றும் தெரியவந்தது. மேலும் கோபால கிருஷ்ணனுக்கு டிராக்டர் ஓட்டத்தெரியாது என்பதால் கருவேப்பஞ்சேரியிலிருந்து எடுத்து வரப்பட்ட டிராக்டர் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டத்தெரியாமல் சாலையில் அங்கும் இங்குமாக தரிக்கட்டி சென்றுள்ளது. இந்த நிலையில்தான் வி.ஏ.ஓ. உதவியாளர் அருள்முருகன் இதில் சிக்கி பலியானார் என்று தெரியவந்தது. டிராக்டர் ஓட்டி வந்த கோபால கிருஷ்ணன் விபத்து நடந்ததும் அங்கிருந்தவர் தப்பி ஓடியதால் அவரைப் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
படம் செய்தி:
1. முத்துப்பேட்டை அடுத்த கள்ளுக்குடி கிராமத்தில் தறிக்கெட்டு ஓடிய டிராக்டர் விபத்து ஏற்பட்டு சாலை ஓரம் உள்ள குளத்தில் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
2. விபத்தில் சிக்கிய டிராக்டரை மீட்கும் ஜே.சி.பி.இயந்திரம்.

மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை

[gallery columns="1" size="large" ids="32626,32627"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.