விஜய் மல்லையாவை நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தது ஏன்? பிரதமருக்கு கெஜ்ரிவால் கேள்விவிஜய் மல்லையாவை நாட்டு விட்டு வெளியேற அனுமதித்தது ஏன்? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:- “ பிரதமருக்கு நேரடியாக அறிக்கை அளிக்க சிபிஐ தொடங்கியதில் இருந்து, மல்லையா ஏன் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார் என்பதற்கு பதில் சொல்ல பிரதமர் கடமைப்பட்டுள்ளார். உயர்மட்டத்தில் அனுமதி பெறாமல் சிபிஐயால் அனுமதி அளிக்க முடியாது” என்றார்.

Screen 1

 

விஜய் மல்லையா வெளிநாடு தப்பியதன் விவரம்:-

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா எம்.பி. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல முன்னணி வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதை திருப்பிச் செலுத்தவில்லை. வங்கியின் விதிமுறைகளை மீறி அதிக அளவில் விஜய் மல்லையாவுக்கு வங்கி அதிகாரிகளும் கடன் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

வங்கி கடனை திரும்பச் செலுத்தாதது குறித்து வங்கிகள் அளித்த புகாரின்பேரில், கிங் பிஷர் விமான நிறுவன இயக்குனர் விஜய் மல்லையா, அந்நிறுவனத்தின் முன்னாள் நிதி அதிகாரி ரகுநாதன் மற்றும் பெயர் விவரம் வெளியிடப்படாத இந்திய தொழில் வளர்ச்சி வங்கி(ஐ.டி.பி.ஐ) அதிகாரிகள் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.இந்தநிலையில் விஜய் மல்லையா மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 9–ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மார்ச் 2–ந்தேதியே நாட்டைவிட்டு வெளியேறி இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வன்மையாக கண்டித்தன.

இதற்கிடையே, பண மோசடி வழக்கில் விஜய் மல்லையா வரும் 18 ஆம் தேதி ஆஜராக கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.