மாட்டிறைச்சி தடை பற்றி பேசினால் என் வேலை பறிப்போகும் மாணவர்களிடம் பகிரங்கமாக பதில் அளித்த பொருளாதார ஆலோசகர்மாட்டிறைச்சி தடை பற்றி பேசினால் என் வேலை பறிபோகும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறியுள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை பல்கலைகழகத்தில் சிறப்பு விருந்தினராக தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது மாணவர்கள் சிலர் மாட்டிறைச்சியை தடை செய்தால் விவசாயிகளின் வருமானத்தில் அல்லது கிராம பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க அரவிந்த் சுப்ரமணியன் மறுத்து விட்டார்.

அதனை தொடர்ந்து மாணவர்களிடம் பேசிய அரவிந்த் சுப்ரமணியன் “உங்களுக்கே தெரியும் இந்த கேள்விக்கு நான் பதில் அளித்தால் என் வேலை பறிபோகும்.மேலும் என்னுடைய வெலையை இழக்க விரும்பவில்லை.

இவ்வாறு தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.