கொழும்பு முட்டை வட்லாப்பம் நாவிற்கு சுவையாண டிஷ்!...



என்னென்ன தேவை?
முட்டை - 10, சர்க்கரை - 2 டம்ளர்,
தேங்காய் - 1,
ஏலக்காய் - 3,
முந்திரி - 6,
நெய் - 1/2 டீஸ்பூன்.

அலங்கரிக்க...
பாதாம், முந்திரி - தேவைக்கு. 

எப்படிச் செய்வது?
தேங்காயை அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, கெட்டியாகப் பால் எடுக்கவும். முட்டையை நன்கு நுரை பொங்க அடிக்கவும்.  சர்க்கரையைப் பொடித்து வைக்கவும். சர்க்கரை, தேங்காய்ப் பால், முட்டை மூன்றையும் நன்கு கலக்கவும். முந்திரியைப்  பொடியாக அரிந்து நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். ஏலக்காயை பிரித்து, உள்ளே உள்ள விதையை எடுத்து லேசாக வறுத்துப்  பொடித்துச் சேர்த்து, நன்கு கலக்கி, குக்கரில் அடியில் வைக்கும் தட்டை வைத்து அதன் மேல் ஒரு டிபன் பாக்ஸில் கலவையை  ஊற்றி மூடிபோட்டு குக்கரை மூடி 5 விசில் விட்டு 10 நிமிடங்கள் சிம்மில் வைத்து அவிக்கவும்.

*இடியாப்பம், ஆப்பம், தோசைக்கு நல்ல சைட்டிஷ். சர்க்கரையை விரும்பாதவர்கள் அளவை அரை டம்ளர் குறைத்துக்  கொள்ளலாம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.