முத்துப்பேட்டை அருகே தனது மனைவியை அழைத்து செல்ல பஸ் ஸ்டான்டில் காத்திருந்தவர் மீது ஒரு சரமாறி தாக்கு. 

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த செருபனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் அன்பழகன்(49). இவர் தனது மனைவி வெளியூர் சென்றுவிட்டு பேருந்தில் வந்துக் கொண்டிருந்தவரை அழைத்து செல்வதற்காக நாச்சிக்குளம் பஸ் ஸ்டான்டில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த அப்பகுதி தனியார் அச்சக உரிமையாளர் முத்துக்குமார், வீரக்குமார் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் குடி போதையில் அன்பழகனிடம் தகராறு செய்து மறைத்து வைத்திருந்த கட்டையால் சரமாறியாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதில் தலை பகுதியில் படுகாயம் அடைந்த அன்பழகன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

 

மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.