அரியலூரில் குடும்பத் தகராறு காரணமாக நிகழ்ந்த பரிதாபம்அரியலூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவன் உடலில் தீவைத்துக்கொண்டு மனைவி மற்றும் மகனை கட்டிப்பிடித்ததில் மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் குமாஸ்தாவாக உள்ளார். இவருக்கு நிர்மலா மேரி என்ற மனைவியும், ரோகன் என்ற மகனும் உள்ளனர். மகன் ரோகன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறான். இந்நிலையில் நேற்று இரவு சுப்பரமணியன் வீட்டில் தீபற்றி எரிந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில் சுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நிர்மலா மேரி, மற்றும் ரோகன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குடும்பத்தகராறு காரணமாக சுப்ரமணியன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றிவிட்டு மனைவி மற்றும் மகன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கட்டிப்பிடித்ததாக தெரியவந்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.