"ஐபோனை அன்லாக் செய்ய புதிய வழி"   ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபோனின் பாதுகாப்பு தொழில்நுட்ப பூட்டை உடைத்து அதற்குள் புகுவதற்கான ஒரு தொழில்நுட்ப வழியை அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத்துறை அடையாளம் கண்டிருப்பதாக அமெரிக்க அரசின் நீதித்துறை நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.


சான்பெர்னாண்டினோ துப்பாக்கிதாரியான சையத் ரிஸ்வான் ஃபாரூக்கின் ஐபோனின் பாதுகாப்புப் பூட்டை உடைக்க ஐபோனின் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் உதவ வேண்டும் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது.


கடந்த டிசம்பரில் 14 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது தொடர்பான வழக்கில் சையத் ரிஸ்வானும் அவர் மனைவியும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். அந்த வழக்கின் புலனாய்வின் ஒரு பகுதியாக அவர்களின் ஐபோனை ஆராயவிரும்பும் அமெரிக்க அரசின் மத்திய புலனாய்வுத்துறையினர் (எஃப் பி ஐ) அதற்கு அதை தயாரித்த ஆப்பிள் நிறுவனம் உதவ வேண்டும் என்று கோரினார்கள்.


ஆனால் இந்த கோரிக்கையை ஆப்பிள் நிறுவனம் ஏற்க மறுத்துவிட்டது.


ஆப்பிள் நிறுவனத்தின் மறுப்பை எதிர்த்து வழக்கு தொடுத்திருக்கும் எஃப் பி ஐ, தற்போது இந்த வழக்கின் விசாரணையை சிலநாட்களுக்கு ஒத்திவைக்கும்படி நீதிமன்றத்தில் கோரியுள்ளது.


காரணம் ஐபோனின் பாதுகாப்பு தொழில்நுட்ப பூட்டை உடைக்க ஒரு புதிய வழி இருப்பதாக ஆப்பிள் அல்லாத நிறுவனம் ஒன்று தம்மிடம் தெரிவித்திருப்பதாகவும் அதை பரிசோதித்துப்பார்க்க கால அவகாசம் தேவை என்றும் அதுவரை இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அமெரிக்க நீதித்துறையின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.


அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்திருக்கிறது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.