தாவூத் இப்ராகிமின் மேலும் ஒரு கூட்டாளி கணேஷ் பிலாரே கைதுநிழல் உலக தாதா தாவூம் இப்ராகிமின் மற்றொரு கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளார்.


20 ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாக இருந்து வந்த தாவூத் இப்ராகிமின் கூட்டாளி நதீம் மிஸ்திரி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் குஜராத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான கணேஷ் பிலாரே (வயது 45) என்பவர் சயான் கோலிவாடா பிரதிக்ஷா நகர் பகுதிக்கு தினந்தோறும் வந்து செல்வதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.


இந்த நிலையில் நேற்று பிரதிக்ஷா நகர் பகுதிக்கு வந்த கணேஷ் பிலாரேவை போலீசார் கைது செய்தனர். கணேஷ் பிலாரே மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் தொடர்பாக அவரை போலீசார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த கணேஷ் பிலாரே டிரைவர் வேலை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.