இஷ்ரத் ஜகான், போலி என்கவுன்டர் தொடர்பாக குஜராத் போலீசார் மீதான வழக்கை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்புஇஷ்ரத் ஜகான், போலி என்கவுன்டர் தொடர்பாக, குஜராத் போலீசாருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கையும், அவர்களுக்கு எதிரான, 'சஸ்பெண்ட்' நடவடிக்கையையும் ரத்து செய்ய, சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.குஜராத்தில், 2004ல் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல வந்ததாக, மும்பை கல்லுாரி மாணவி இஷ்ரத் ஜகான் உட்பட, நான்கு பேரை, அந்த மாநில போலீசார், என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

போலியாக என்கவுன்டர் நடத்தப்பட்டதாக, குஜராத் போலீஸ் உயரதிகாரிகள் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. அவர்களுக்கு எதிராக சஸ்பெண்ட் உள்ளிட்ட
துறை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.இந்நிலையில், மும்பை
தாக்குதல் வழக்கில், பாகிஸ்தான் பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, 'வீடியோ கான்பரன்சிங்'
மூலம், மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தான்.
அப்போது, 'இஷ்ரத் ஜகான், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்' எனக் கூறியிருந்தான்.

இதையடுத்து, 'இஷ்ரத் ஜகான் போலி என்கவுன்டர் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டுள்ள குஜராத் முன்னாள் டி.ஐ.ஜி., வன்சாரா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரி, வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.சி.கோஸ், நீதிபதி அமிதவா ராய் அடங்கிய அமர்வு, 'இது சம்பந்தமாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்; இந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது' எனக் கூறி, விசாரிக்க மறுத்து விட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.