மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க : முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிப்புபரபரப்பான தேர்தல் சூழலில் விஜயகாந்தின் தே.மு.தி.க கட்சி மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்தது. மேலும் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகவும் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் மக்கள் நலக் கூட்டணி - தே.மு.தி.க அணி போட்டியிடுகிறது. மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு 124 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து மற்ற 4 கட்சிகளும் மீதமுள்ள 110 இடங்களில் போட்டியிட உள்ளன. தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் உறுதியாகி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிகிறது.

முன்னதாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தே.மு.தி.க அலுவலகத்துக்கு வந்தனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் கட்சி அலுவலகத்துக்கு வைகோ, ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகிய நால்வரும் வந்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.