மதச்சார்புடன் செயல்படுகிறது பாஜக… இந்து மக்கள் கட்சி குற்றச்சாட்டு. நம்பிடோம்……. காமடி.....வீடியோமதச்சார்புடன் செயல்படும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். 
சென்னையில் இந்து மக்கள் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், உடுமலைப்பேட்டை சாதிய ஆணவக் கொலை சம்பவத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

சங்கரை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என தெரிவித்த அர்ஜுன் சம்பத், போலி மதச்சார்பின்னையை பின்பற்றும் அக்கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்றும் கூறினார்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.