நீ என்னை விட்டு பிரிந்து சென்றால் விமானத்தை விபத்தில் சிக்க வைப்பேன்-விமானிமனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விமானி ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டு விமானத்தையும் விபத்தில் சிக்க வைக்க திட்டமிட்டது மனைவி மூலம் விமான நிலைய அதிகாரிகளுக்கு வந்த தகவலால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இத்தாலியில் உள்ள விமான் நிறுவனத்தில் 40 வயது மிக்க விமானி ஒருவர் பணி புரிந்து வருகிறார். சம்பவத்தன்று அவருக்கும் அவரது மனைவிக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த சண்டையில் விமானியின் மனைவி உன்னை விட்டு பிரிந்து செல்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலுடன் விமானி பணிக்கு சென்றார்.
விமானம் புறப்பட தயார் ஆன நிலையில் இருந்த போது மனைவிக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ”நீ என்னை விட்டு பிரிந்து சென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்”. மேலும் விமானத்தையிம் விபத்தில் சிக்க வைத்து விடுவேன் மேலும் பயணிகளையும் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து விமானியின் மனைவி இது குறித்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த விமானியை நீக்கி விட்டு வேறு ஒரு விமானியை பணியில் அமர்த்தினர். அதனை தொடர்ந்து அந்த விமானம் ரோம் நகரில் இருந்து புறப்பட்டு ஜப்பான் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் சுமார் 200 பயணிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட விமானிக்கு தொடர்ந்து மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.